மாண்ட்ரேக் லினக்ளைத் தேர்வு செய்ததற்கு வாழ்த்துகள்!

புழங்குவதற்கு மிகவும் எளிதாகவும், அனைத்து வசதிகளையும் உடைய லினக்ஸ் தொகுதியை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த லினக்ஸ் உங்களுக்கு, இனிவரும் பல வருடங்களுக்கும் முழுத் திருப்தியையும் அளிக்கும் என்பதே எங்கள் நம்பிக்கை.

இந்த Mandrakesoft.com இணையத்தளம் மூலம் உங்கள் அபிமான லினக்ஸ் தொகுதியை வழங்குபவர்களிடம் தொடர்பு வைத்துக்கொள்ள உதவுகிறது. இதே தளத்தில் உங்களுக்கு உபயோகமான பல புதிய பொருட்களையும் சேவைகளையும் கூட நீங்கள் கண்டறிய நேரிடலாம்.


 

 மாண்டிரேக் கிளப் (Mandrakeclub.com) இல் சேருமாறு உங்களை நாங்கள் வலியுறுத்துகிறோம். இங்கு பிரத்தியேகமான பல வசதிகள், மற்றும் நூற்றுக்கணக்கான செயலிகள் உங்களுக்குக் கிடைக்கும்.

     
 

 மாண்ட்ரேக்சாப்ட் நிறுவனத்தின் அனைத்துப் பொருட்களையும், சேவைகளையும் வாங்க ஒரே இடம் மாண்டிரேக் ஸ்டோர் (Mandrakestore.com) -- எங்கள் அதிகாரபூர்வமான இணையக்கடை.

     
 

 உங்களுக்கு ஏதேனும் தொழில்நுட்ப உதவிகள் தேவைப்பட்டால் மாண்டிரேக் ஸ்டோரில் உதவிச் சேவையினை வாங்கிக் கொள்ளலாம். மாண்டிரேக் ஸ்டோரில், உங்களது அதிகாரபூர்வமான மாண்டிரேக் லினக்ஸ் தொகுதியைப் பதிவும் செய்து கொள்ளலாம். பிறகு Mandrakeexpert.com இணையத்தளத்திற்குச் சென்று மாண்டிரேக்சாப்ட் உதவிக்குழுவிடமிருந்தும், மற்ற பயனர்களிடமிருந்தும் தேவையான உதவிகளைப் பெறலாம்.

     
 

 உலகுதழுவிய திறந்த ஆணைமூல லினக்ஸ் திட்டத்திற்குத் தன்னார்வலராக உதவிபுரிய விரும்பினால் அதுபற்றிய மேலதிக விவரங்களைப் பெறப் போக வேண்டிய தளம்: www.mandrakelinux.com